» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ஷிகர் தவான் அறிவிப்பு!
சனி 24, ஆகஸ்ட் 2024 4:43:56 PM (IST)
சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்துள்ளார்.

மிகச்சிறந்த தொடக்க வீரராக செயல்பட்ட ஷிகர் தவான் இந்திய அணிக்காக பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். இவர் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் இந்திய அணிக்காக கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடி இருந்தார்.
அதன் பின்னர் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்வால், இஷன் கிஷான் போன்ற இளம் வீரர்களின் வருகையால் அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறினார். இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் இன்று அறிவித்துள்ளார்.
இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடைபெறும் ஷிகர் தவானுக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், "சிறப்பான கெரியருக்காக வாழ்த்துக்கள் சிக்கி. வருங்காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் அதே மகிழ்ச்சியை பரப்புவீர்கள் என்பது எனக்குத் தெரியும்" என்று வாழ்த்தியுள்ளார்.
அதே போல சுரேஷ் ரெய்னா, "எண்ணற்ற நினைவுகளுடன் சிறப்பான கெரியரை கொண்டதற்கு வாழ்த்துகள் ஷிகர் தவான். உங்களுடன் இந்திய அணியின் உடைமாற்றம் அறையை பகிர்ந்து கொண்டது எனக்கு கவுரவமானது சகோதரரே. உங்களின் வருங்கால பயணத்திற்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
மேலும் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன், "சிறப்பான கெரியருக்கு வாழ்த்துகள் ஷிகர். சிறப்பான கிரிக்கெட்டர் என்பதை தாண்டி அனைத்து சூழ்நிலைகளிலும் ஷிகர் நேர்மறையுடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பயணத்திற்கு வாழ்த்துகள்" என்று பாராட்டியுள்ளார்.
வாசிம் ஜாபர், "பெரிய தொடர்களின் பிளேயர். தமக்கு தகுதியான பாராட்டுகளை எப்போதும் பெற்றதில்லை. ஆனால் அணி வெல்லும் வரை அவர் அதற்காக கவலைப்பட்டதில்லை. எப்போதும் அணியின் மனிதர். அற்புதமான கெரியர் மற்றும் 2வது இன்னிங்சுக்கு வாழ்த்துகள் தவான்" என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் ப்ரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:53:19 PM (IST)

உலக கோப்பை தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது: வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி தகவல்!
சனி 15, மார்ச் 2025 3:25:02 PM (IST)

ஐபிஎல்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமன
வெள்ளி 14, மார்ச் 2025 11:50:46 AM (IST)

ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிப்பு: பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராகவும் தேர்வு!
வியாழன் 13, மார்ச் 2025 8:04:21 PM (IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா தகுதி பெறாததால் ரூ. 45 கோடி இழப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 11:49:49 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’!
திங்கள் 10, மார்ச் 2025 9:02:16 AM (IST)
