» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒரே ஓவரில் 39 ரன்கள்: யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிப்பு!
செவ்வாய் 20, ஆகஸ்ட் 2024 5:44:04 PM (IST)
சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை சமோவா தீவைச் சேர்ந்த வீரர் டேரியஸ் விஸ்ஸெர் முறியடித்துள்ளார்.

நளின் நிபிக்கோ மொத்தமாக 9 பந்துகளை வீசினார். அதில், மூன்று நோ-பால்களும் அடங்கும். டேரியஸ் விஸ்ஸெர் 14 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 62 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய சாமோவைச் சேர்ந்த முதல் வீரர் என்றச் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் டேரியஸ் விஸ்ஸெர். 15 ஆவது ஓவரில் டேரியஸ் விஸ்ஸெர் ரன்கள் அடித்த விவரம்: 6, 6, 6, 1nb, 6, 0, 1nb, 7nb, 6.
சாமோ அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வனுவாட்டு அணியால் 20 ஓவர்களில் 164 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், சாமோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஒரு ஓவரில் 36 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால சாதனையை தற்போது சாமோவைச் சேர்ந்த வீரர் டேரியஸ் விஸ்ஸார் முறியடித்துள்ளார்.
இதேபோல, மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொல்லார்ட் மற்றும் நிக்கோலஸ் பூரன், நேபாளத்தின் தீபேந்திர சிங் ஐரி, இந்தியாவின் ரோஹித் சர்மா, ரிங்கு சிங் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக சிலி நாட்டின் புளோரன்சியா மார்டினெஸ் 52 ரன்கள் எடுத்ததே மகளிர் டி20 சர்வதேசப் போட்டியில் ஒரே ஓவரில் அடித்த அதிகபட்ச ரன்களாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர்: ஆண்டர்சன் - தெண்டுல்கர் கோப்பை அறிமுகம்
வியாழன் 19, ஜூன் 2025 8:24:37 AM (IST)

தெற்காசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை யாஜிக் தங்கம் வென்றார்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:05:53 PM (IST)

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு: ஹைடன் கணிப்பு
செவ்வாய் 17, ஜூன் 2025 4:49:51 PM (IST)

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக சாம்பியன்: கேப்டன் டெம்பா பவுமா சாதனை!
ஞாயிறு 15, ஜூன் 2025 11:25:04 AM (IST)

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: டிராபி பெயரை மாற்ற பிசிசிஐ எதிர்ப்பு?
சனி 14, ஜூன் 2025 5:25:42 PM (IST)

ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் தோனி: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!!
செவ்வாய் 10, ஜூன் 2025 5:24:10 PM (IST)
