» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்தியா சாதிக்கும்: ராகுல் டிராவிட் நம்பிக்கை

செவ்வாய் 30, ஜூலை 2024 3:44:04 PM (IST)

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் தங்கப்பதக்கம் வென்றால் சிறப்பாக இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள 34 வது ஒலிம்பிக்கில் (2028), முதன் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், பாரிசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் இந்திய அணி முன்னாள் வீரர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

அவர் கூறியது: வீரர்கள் ஓய்வு அறையில் ('டிரசிங் ரூம்') 2026ல் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை, 2027ல் நடக்கும் ஒருநாள் உலக கோப்பை குறித்து பேசுகின்றனர். இத்துடன் 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் குறித்தும் பேசத் துவங்கியுள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் பங்கேற்று, ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவது, உலகின் பல முன்னணி நட்சத்திரங்களை சந்திப்பதுடன், இதில் பங்கேற்று கிரிக்கெட் பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்புகின்றனர். 

என்னைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்றால், அது சிறப்பான தொடராக அமையும். இது எனது கனவாக உள்ளது. துரதிருஷ்டவசமாக இதில் என்னால் பங்கேற்க முடியாது என்றாலும், முடிந்தவரை தொடரை சிறப்பாக நடத்த தேவையான முயற்சி எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

உண்மைJul 30, 2024 - 04:38:56 PM | Posted IP 172.7*****

அட கிரிக்கெட் பைத்தியம் பிடித்த முட்டா பயலே கிரிக்கெட்டை ஒழித்தால்தான் ஒலிம்பிக்கில் நிறைய பதக்கங்களை வெல்ல முடியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் 2026 அட்டவணை

திங்கள் 2, பிப்ரவரி 2026 11:04:12 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory