» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை துவக்கம்: ஜூன் 5ல் அயர்லாந்துடன் இந்திய அணி மோதல்
சனி 1, ஜூன் 2024 12:26:54 PM (IST)
ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் நாளை (2-ம் தேதி) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக யாரை களமிறக்குவதற்கு என்பதற்கும், ஜஸ்பிரீத் பும்ராவுடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக யாரை களமிறக்குவது என்பதற்கும் தீர்வு காணக்கூடியதாக அமையக்கூடும். ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால் விளையாடும் லெவனில் ஷிவம் துபே இடம் பெறுவது சந்தேகம்.
மாறாக விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினால் ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். பந்து வீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இதனால் இவர்களில் யார்? பும்ராவுடன் இணைந்து செயல்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கும் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் தீர்வு காண இந்திய அணி முயற்சிக்கக்கூடும். பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் உள்ள 15 வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை
Date | Matches | Venue | Time (IST) |
---|---|---|---|
June 2 | அமெரிக்காv கனடா | Dallas | 6am |
June 2 | மேற்கிந்திய தீவுகள் v பப்புவா நியூ கினியா | Guyana | 8pm |
June 3 | நமீபியாv ஓமன் | Barbados | 6am |
June 3 | இலங்கை v தென்னாப்பிரிக்கா | New York | 8pm |
June 4 | ஆப்கானிஸ்தான் v Uganda | Guyana | 6am |
June 4 | இங்கிலாந்து v ஸ்காட்லாந்து | Barbados | 8pm |
June 4 | நெதர்லாந்து v நேபாளம் | Dallas | 9pm |
June 5 | இந்தியா v அயர்லாந்து | New York | 8pm |
June 6 | ஆஸ்திரேலியா v Oman | Barbados | 5am |
June 6 | பப்புவா நியூ கினி v Uganda | Guyana | 6am |
June 6 | அமெரிக்கா v பாகிஸ்தான் | Dallas | 9pm |
June 7 | நமீபியாv ஸ்காட்லாந்து | Barbados | 12.30am |
June 7 | கனடா v அயர்லாந்து | New York | 8pm |
June 8 | நியூசிலாந்து v Afghanistan | Guyana | 5am |
June 8 | இலங்கை v பங்களாதேஷ் | Dallas | 6am |
June 8 | நெதர்லாந்து v தென் ஆப்பிரிக்கா | New York | 8pm |
June 8 | ஆஸ்திரேலியா v இங்கிலாந்து | Barbados | 10.30pm |
June 9 | மேற்கிந்திய தீவுகள் v Uganda | Guyana | 6am |
June 9 | இந்தியா v பாகிஸ்தான் | New York | 8pm |
June 9 | Oman v ஸ்காட்லாந்து | Antigua | 10.30pm |
June 10 | தென் ஆப்பிரிக்கா v பங்களாதேஷ் | New York | 8pm |
June 11 | பாகிஸ்தான் v கனடா | New York | 8pm |
June 12 | இலங்கை v நேபாளம் | Florida | 5am |
June 12 | ஆஸ்திரேலியா v Namibia | Antigua | 6am |
June 12 | அமெரிக்கா v இந்தியா | New York | 8pm |
June 13 | மேற்கிந்திய தீவுகள் v நியூசிலாந்து | Trinidad | 6am |
June 13 | பங்களாதேஷ் v நெதர்லாந்து | St. Vincent | 8pm |
June 14 | இங்கிலாந்து v Oman | Antigua | 12.30am |
June 14 | ஆப்கானிஸ்தான் v பப்புவா நியூ கினி | Trinidad | 6am |
June 14 | அமெரிக்கா v அயர்லாந்து | Florida | 8pm |
June 15 | தென் ஆப்பிரிக்கா v நேபாளம் | St. Vincent | 5am |
June 15 | நியூசிலாந்து v Uganda | Trinidad | 6am |
June 15 | இந்தியா v கனடா | Florida | 8pm |
June 15 | நமீபியாv இங்கிலாந்து | Antigua | 10.30pm |
June 16 | ஆஸ்திரேலியா v ஸ்காட்லாந்து | St. Lucia | 6am |
June 16 | பாகிஸ்தான் v அயர்லாந்து | Florida | 8pm |
June 17 | பங்களாதேஷ் v நேபாளம் | St. Vincent | 5am |
June 17 | இலங்கை v நெதர்லாந்து | St. Lucia | 6am |
June 17 | நியூசிலாந்து v பப்புவா நியூ கினி | Trinidad | 8pm |
June 18 | மேற்கிந்திய தீவுகள் v Afghanistan | St. Lucia | 6am |
June 19 | Super 8 Group 2: A2 v D1 | Antigua | 8pm |
June 20 | Super 8 Group 2: B1 v C2 | St. Lucia | 6am |
June 20 | Super 8 Group 2: C1 v A1 | Barbados | 8pm |
June 21 | Super 8 Group 2: B2 v D2 | Antigua | 6am |
June 21 | Super 8 Group 2: B1 v D1 | St. Lucia | 8pm |
June 22 | Super 8 Group 2: A2 v C2 | Barbados | 6am |
June 22 | Super 8 Group 2: A1 v D2 | Antigua | 8pm |
June 23 | Super 8 Group 2: C1 v B2 | St. Vincent | 6am |
June 23 | Super 8 Group 2: A2 v B1 | Barbados | 8pm |
June 24 | Super 8 Group 2: C2 v D1 | Antigua | 6am |
June 24 | Super 8 Group 2: B2 v A1 | St. Lucia | 8pm |
June 25 | Super 8 Group 2: C1 v D2 | St. Vincent | 6am |
June 27 | அரையறுதி 1 | Guyana | 6am |
June 27 | அரையறுதி 2 | Trinidad | 8pm |
June 29 | இறுதிப்போட்டி | Barbados | 7.30pm |