» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அதிவேக அரைசதம் : ரிஷப் பந்த் புதிய சாதனை!

சனி 4, ஜனவரி 2025 3:59:29 PM (IST)



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 141/6 ரன் எடுத்துள்ளது. இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இந்தியா, தொடரில் 1--2 என பின்தங்கியுள்ளது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்து, 176 ரன் பின்தங்கி இருந்தது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. லபுசேன் (2), கான்ஸ்டாஸ் (23), ஹெட் (4), நிலைக்கவில்லை. ஸ்மித் 33 ரன் எடுத்தார். கேரி 21, கம்மின்ஸ் 10 ரன்னில் அவுட்டாக, அறிமுக வீரர் வெப்ஸ்டர் (57) அரைசதம் அடித்து கிளம்பினார். கடைசியில் போலண்ட் (9) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 4 ரன் முன்னிலை பெற்றது.

இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3, பும்ரா 2, நிதிஷ் குமார் 2 விக்கெட் சாய்த்தனர். இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (22), ராகுல் (13), சுப்மன் (13), கோலி (6) ஏமாற்றம் தந்தனர். வேகமான ரன் சேர்த்த ரிஷாப் பன்ட், 33 பந்தில் 61 ரன் எடுத்து அவுட்டானார். நிதிஷ் 4 ரன்னில் அவுட்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 141/6 ரன் எடுத்து 145 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா (8), வாஷிங்டன் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். தொடர்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ரிஷப் பந்த் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதிவேகமாக (28 பந்துகள்) அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனை இதற்கு முன்பு அவரிடமே இருந்தது. தற்போது, 29 பந்துகளில் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கம்மின்ஸ் வீசிய 22.2ஆவது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் 61ரன்கள் எடுத்து இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பியுள்ளார். இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 128/5 ரன்கள் எடுத்துள்ளது. நிதீஷ் ரெட்டி 4 ரன்களுடனும் ஜடேஜா 2 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

இந்திய அணி 132 ரன்கள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர்கள்

28 பந்துகள் - ரிஷப் பந்த் (2022)

29 பந்துகள் - ரிஷப் பந்த் (2025)

30 பந்துகள் - கபில் தேவ் (1982)

31 பந்துகள் - ஷர்துல் தாக்குர் (2021)

31 பந்துகள் - ஜெய்ஸ்வால் (2024)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory