» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

வியாழன் 30, மே 2024 12:15:20 PM (IST)



நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

இதற்கு முன்னர் இந்த பார்மெட்டில் இருவரும் மூன்று முறை விளையாடி உள்ளனர். அந்த மூன்று ஆட்டமும் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காட்சி மற்றும் ரேபிட் முறை ஆட்டங்களில் கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். 18 வயதான பிரக்ஞானந்தா, மூன்று சுற்றுகளுக்குப் பிறகு 5.5 புள்ளிகளை பெற்றார். இதில் வெள்ளை நிற காய்களை பயன்படுத்தி அவர் விளையாடி இருந்தார். 

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கார்ல்சன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். கிளாசிக்கல் செஸ் ஆட்டத்தில் காய்களை நகர்த்த வீரர்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். வழக்கமாக இந்த வகை ஆட்டத்தில் ஒரு மணி நேரம் வரை கூட காய்களை நகர்த்த வீரர்கள் நேரம் எடுத்துக் கொள்ள முடியும். இதே தொடரில் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory