» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக மோடி, அமித்ஷா பெயர்களில் போலி விண்ணப்பம்!

செவ்வாய் 28, மே 2024 4:48:36 PM (IST)



இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலி விண்ணப்பங்கள் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்று வந்தது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (மே 27) முடிவடைந்தது.

இந்த நிலையில், மொத்தம் 3000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும் போலியான விண்ணப்பங்களாக கிடைக்கப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், தோனி உள்ளிட்டோர் பெயரிலெல்லாம் போலியாக விண்ணப்பித்துள்ளனர்.

இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் கூகுள் பார்ம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டதால், போலிகள் அதிகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து அவர்களில் ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க உள்ளது பிசிசிஐ.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory