» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ராஞ்சியில் நாடாளுமன்ற தேர்தல்: எம்.எஸ்.தோனி வாக்களித்தார்!
சனி 25, மே 2024 3:40:04 PM (IST)
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி வாக்களித்தார்.
6-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி வாக்களித்தார்.