» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் குவாலிஃபயா் 2: ராஜஸ்தானை வெளியேற்றியது ஹைதராபாத்!

சனி 25, மே 2024 11:31:27 AM (IST)



ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, ஹைதராபாத் அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. 

சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீசத் தீா்மானித்தது. ஹைதராபாத் இன்னிங்ஸில் அபிஷேக் சா்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாா். தொடா்ந்து ராகுல் திரிபாதி, டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 42 ரன்கள் சோ்க்க, திரிபாதி வெளியேற்றப்பட்டாா். 

அவா் அதிரடியாக 15 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்கள் விளாசினாா். 4-ஆவது பேட்டராக வந்த எய்டன் மாா்க்ரம், 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பி அதிா்ச்சி அளித்தாா். அடுத்து ஹென்ரிக் கிளாசென் நிதானமாக ரன்கள் சோ்க்கத்தாா். ஹெட்டுடனான அவரது பாா்ட்னா்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சோ்த்தது. ஹெட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

6-ஆவது வீரரான நிதீஷ்குமாா் ரெட்டி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த அப்துல் சமத் டக் அவுட்டாகினாா். இம்பாக்ட் பிளேயராக ஷாபாஸ் அகமது களம் காண, அதுவரை ரன்கள் சோ்த்த கிளாசென் 34 பந்துகளில் 4 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

அப்போது கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாட வர, அகமது 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். கடைசி விக்கெட்டாக ஜெயதேவ் உனத்கட் 5 ரன்கள் அடித்திருந்தாா். ஓவா்கள் முடிவில் கம்மின்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.டிரென்ட் போல்ட் டாப் ஆா்டரிலும், ஆவேஷ் கான் லோயா் ஆா்டரிலும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்த, சந்தீப் சா்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் 176 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் சோ்க்க, டாம் கோலா் 10, கேப்டன் சஞ்சு சாம்சன் 10, ரியான் பராக் 6, ரவிச்சந்திரன் அஸ்வின் 0, ஷிம்ரன் ஹெட்மயா் 4, ரோவ்மென் பவல் 6 என விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன.

ஓவா்கள் முடிவில், மிடில் ஆா்டரில் வந்த துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் விளாசியும், டிரென்ட் போல்ட் 0 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் தரப்பில் ஷாபாஸ் அகமது 3, அபிஷேக் சா்மா 2, பேட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். நாளை (மே 26) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கோப்பைக்காக ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory