» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இளம்வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி மும்பை மாணவி சாதனை

வெள்ளி 24, மே 2024 10:42:31 AM (IST)

நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரம் ஏறி மும்பை 12-ம் வகுப்பு மாணவி காம்யா கார்த்திகேயன் சாதனை படைத்திருக்கிறார்.

உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8,848 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும். வெகுசிலரே இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைத்து உள்ளனர். தற்போது மிக இளம்வயதில் இந்த சிகரத்தை தொட்ட இந்திய பெண்ணாக சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி. 

கடற்படையில் அதிகாரியாக இருக்கும் கார்த்திகேயன் என்பவரின் மகளான காம்யா, நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்திருக்கிறார். அவர் தற்போது மும்பையில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

16 வயதில் எவரெஸ்ட் சிகரம் தொட்டதையடுத்து, மிக இளம் வயதில் எவரெஸ்ட் ஏறிய இந்திய பெண்மணி மற்றும் உலக அளவில் இளம் வயதில் சிகரம் தொட்ட 2-வது பெண்மணி என்ற பெருமையை காம்யா பெற்றுள்ளார். மேலும், இவர், உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயர்ந்த சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் 6 சிகரங்களை தொட்டு சாதனை படைத்துள்ளார். 

வரும் டிசம்பரில் அண்டார்டிகா கண்டத்தில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தில் ஏறி தனது சாதனை பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். காம்யாவின் சாதனையை, இந்திய கடற்படை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory