» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம்: தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:05:25 PM (IST)

கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலாவதாகக் கட்டாயம் பாட வேண்டும் என்ற தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்குப் பிரபல கவிஞர் வைரமுத்து பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தனித் தீர்மானம் இயற்றிய தமிழ்நாடு அரசையும், அதற்கு ஒருதுளி மறுப்புமின்றி ஒருமனதாக ஆதரவளித்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பரந்துபட்ட தமிழ் உலகம் எழுந்து நின்று மனதாரப் பாராட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் சொற்கூட்டம் அல்ல என்றும், அது புவியியல், வரலாறு, பெருமிதம் என அனைத்தும் கொண்ட தமிழினத்தின் அடையாளக் குறியீடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேசிய கீதத்தின் அளவுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழர்கள் அனைவரும் இன்னும் முழுமையாக மனப்பாடம் செய்யவில்லை என்றும், எனவே பள்ளியிலிருந்தே அது கட்டாய மனப்பாடப் பொருளாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்ததைப் போல, இதனை வெறும் தீர்மானமாக மட்டுமின்றிச் சட்டமாகவும் இயற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட கவிஞர் வைரமுத்து, "தமிழ்த்தாயே! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல, செயல் புரிந்தும் வாழ்த்துவோம்" எனத் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)







