» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.39.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உழைக்கும் மகளிர் தங்கும் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து முதல்வர் இக்கட்டடத்தைத் திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஆனந்த் மோகன், மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, விடுதியில் உழைக்கும் மகளிருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை நேரில் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிப்காட் வருவாய் அலுவலர் மா. சுகன்யா, திட்ட அலுவலர் கார்த்திகேயன், இளநிலைப் பொறியாளர்முருகன், கங்கைகொண்டான் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
2.07 ஏக்கர் பரப்பளவில், 1,24,446.82 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளத்துடன் கூடிய 3 தளங்களுடன் இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 138 அறைகளில் 870 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 நபர்கள் தங்கும் 131 அறைகள் (786 படுக்கைகள்) 12 நபர்கள் தங்கும் 7 அறைகள் (84 படுக்கைகள்)
தங்கும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாகக் கட்டில், படுக்கை விரிப்பு, தலையணை, துணி அலமாரி (Wardrobe), படிப்பதற்கான மேஜை மற்றும் நாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 228 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் விசாலமான உணவுக் கூடம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
விடுதியின் அனைத்துத் தளங்களிலும் அதிவேக Wi-Fi வசதியும், மகளிரின் பாதுகாப்பிற்காக அனைத்து முக்கியப் பகுதிகளிலும் சிசிடிவி (CCTV) கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வரவேற்பறை, சலவை மற்றும் துணி உலர்த்தும் அறை, மருத்துவ அறை, பார்வையாளர் அறை, இருசக்கர/நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், விளையாட்டு மைதானம் மற்றும் தொலைக்காட்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளாகத்தில் பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் தரமான தங்குமிடத்தை வழங்கும் வகையில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)







