» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

சட்டமன்றப் பேரவையில் "லாட்டரி நிறுவனத்திடம் திமுக ரூ.900 கோடி வாங்கியது ஏன்?" எனத் தமிழக அமைச்சர் ஆதவ் கேள்வி எழுப்பியதும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அளித்த பதிலும் அவையில் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.
சட்டமன்றத்தில் காரசார விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆதவ் தெரிவித்ததாவது: "போதையில்லாத் தமிழகம் மற்றும் மதுவிலக்கு என்பதே எங்களது முதன்மைக் கொள்கை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, வந்த பின்பும் சரி எங்களது எம்பிக்களோ அல்லது அமைச்சர்களோ எந்தச் சாராய ஆலையையும் நடத்தவில்லை.
ஆனால், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கட்சியின் பொருளாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆகியோர் சாராய ஆலைகளை நடத்தி, டாஸ்மாக் மூலமாக ஆர்டர்களைப் பெற்று ஆதாயம் அடைகிறார்களா இல்லையா?" என வினவினார். அமைச்சர் ஆதவின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், "எங்களைப் பார்த்து லாட்டரி தொழில் குறித்துப் பேசுகிறார்கள். லாட்டரி நிறுவனத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.900 கோடி நிதி வாங்கியது ஏன்? தைரியம் இருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள். நான் எந்தத் தொழிலோ, நிறுவனமோ நடத்தவில்லை" எனக் காட்டமாகப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதில்:
அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: "திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் பணம் வாங்கியது என அமைச்சர் கேட்கிறார். அந்தப் பணத்தைக் கொடுத்ததே அவரது மாமனார் தான்! எதற்காகக் கொடுத்தீர்கள் என்பதை அவரிடமே கேட்டு நீங்கள் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்" எனக் கூறினார்.
உதயநிதியின் பதிலுக்குக் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ், "பணம் எதற்காக வாங்கப்பட்டது என்பது உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் தான் தெரியும். அதை வீட்டிற்குப் போய் உங்கள் அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்" எனப் பதிலடி கொடுத்தார்.
ஓபிஎஸ் கருத்து
இதற்கிடையே இ விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "தேர்தல் நன்கொடை என்பதை பாரதிய ஜனதா, காங்கிரஸ் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே பெற்றுள்ளன. அதை லஞ்சம் போலப் பேசுவது தவறானது" எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
BalaAug 8, 2026 - 02:54:23 PM | Posted IP 162.1*****
900 kodi koduthaanna avan yethi thappu panni irukkan.
உண்மAug 7, 2026 - 10:04:23 PM | Posted IP 172.7*****
திருட்டுப் பயலுக பூரா திமுகவில்
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)








Bala அவர்களுக்குAug 9, 2026 - 08:51:39 AM | Posted IP 104.2*****