» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)
தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்குவதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மறுஆய்வு செய்ய வேண்டும். மேலும், தென்னை மற்றும் பனங்கள் இறக்கவும், விற்கவும் அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கை முடிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவையும் பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)







