» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:03:58 AM (IST)

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
தவெகவின் செய்தித் தொடர்பாளராக இருந்துவரும் ஃபெலிக்ஸ் ஜெரால்டை தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் வகிப்பார். சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி என்பது சிறுபான்மையினர் சமூகங்களின் பிரச்னைகளை நேரடியாக அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலமாகும்.
சிறுபான்மையினர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பே தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம். சிறுபான்மையினர் மீதான புகார்களை விசாரித்தல், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்தல், சமூக நீதி தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மேற்கொள்கிறது. யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, கடந்தாண்டில்தான் தவெகவில் சேர்ந்து கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)







