» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீச்சல் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:43:48 AM (IST)
நெல்லை விக்கிரமசிங்கபுரத்தில் ஆற்றில் நீச்சல் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை அம்பை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை சார்பில் அண்மையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு குறித்தும், 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' (Good Touch & Bad Touch) குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் தைரியமாகத் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்துத் தைரியமாகப் பள்ளியில் தெரிவித்தார். சம்பவத்தன்று அம்மாணவி தனது தாத்தாவுடன் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வழக்கமாகக் குளிக்க வரும் தெற்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஜார்ஜ் (50) என்பவர், மாணவிக்கு நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
நீச்சல் பயிற்சியின் போது, ஜார்ஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பள்ளியில் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், ஜார்ஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியால் குற்றவாளி கைது செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர் : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:39:13 AM (IST)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)

என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 11:05:39 AM (IST)

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)









