» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)
கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் ரயில்வே திட்டங்களின் வளர்ச்சிக்கெனத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. சங்கத் தலைவரும், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.ஆர். ஸ்ரீராம் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் திருநாவுக்கரசு, அருள் ஹில்பர்ட் ஜாண், கே.எஸ். ராஜேஷ், முத்துக்குமார், மோகன், சுஜின்ராஜ், வழக்கறிஞர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரயில்வே வளர்ச்சிப் பணிகளைக் கவனிக்கத் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதைப் போல, தமிழக அமைச்சரவையிலும் மெட்ரோ மற்றும் புதிய ரயில் பாதை திட்டங்களை விரைவுபடுத்தத் தனி அமைச்சரை நியமிக்க மாநில அரசை வலியுறுத்துவது.
கிழக்குக் கடற்கரை ரயில் பாதை: சென்னை முதல் கன்னியாகுமரி வரை (கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், செட்டிகுளம் வழியாக) கிழக்குக் கடற்கரையோரமாகப் புதிய இருப்புப் பாதை அமைக்க ஏற்கனவே ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், உடனடியாக தண்டவாளம் அமைக்கும் பணிகளைத் தொடங்க மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்வது.
நான்கு வழிப்பாத இணைப்பு: நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், கன்னியாகுமரி மற்றும் குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களை அருகிலுள்ள நான்கு வழிச்சாலையுடன் சீராக இணைக்க நடவடிக்கை எடுப்பது.
முன்பணம் செலுத்தும் ஆட்டோ/டேக்ஸி சேவை: ரயில் நிலையங்களில் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, டாக்சி மற்றும் ஆட்டோக்களுக்கு மாநில அரசே முறையான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சந்திப்புகளில் 'பிரி-பெய்ட்' ஆட்டோ/டேக்ஸி ஸ்டாண்ட் வசதியைத் தொடங்க வேண்டும்.
இக்கூட்டத்தில் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம், பொதுச்செயலாளர் எட்வர்ட் ஜெனி, பொருளாளர் எஸ். முருகன், துணைத் தலைவர்கள் கே.பி. திருநாவுக்கரசு, எஸ். முருகதாஸ், அருள் ஹில்பர்ட் ஜாண், கே.எஸ். ராஜேஷ், இணைச் செயலாளர்கள் மோகன், சுஜின்ராஜ், நாராயணமூர்த்தி, முத்துக்குமார், கிருபா ஜோஸ்வின், கண்ணன் மற்றும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தின் நிறைவில் வழக்கறிஞர் நாராயணமூர்த்தி நன்றி உரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)







