» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)

மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செய்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியதாகச் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் வன்னி அரசு, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்ற அவர், இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன். சமூகநீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதுமே அவரைச் சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்; தற்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. 'மக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்யுங்கள், வாழ்த்துகள்' எனக் கூறி அவர் என்னை வாழ்த்தியனுப்பினார்" எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)







