» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹால் அளவு குறித்து வதந்தி: பொது சுகாதாரத்துறை அறிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 11:13:35 AM (IST)
குழந்தைகளுக்கு வழங்கப்படும் 'பாராசிட்டமால் சிரப்' மருந்துகளில் ஆல்கஹால் விதிகளை மீறி அதிகளவில் சேர்க்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்குப் பொது சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தின் (TNMSC) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் மற்றும் அரசு ஆய்வகம் மூலமாகப் பாராசிட்டமால் சிரப் பரிசோதிக்கப்பட்டு, அதன் தரம் முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான மருந்துகளில் பாராசிட்டமாலை எளிதில் கரைப்பதற்காக மட்டுமே ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆல்கஹாலின் அளவு 10 சதவீத வரம்பிற்குள்ளேயே வைக்கப்படுகிறது. உதாரணமாக, 60 மி.லி. அளவு கொண்ட ஒரு மருந்துப் பாட்டிலில் அதிகபட்சமாக 10 சதவீதம், அதாவது 6 மி.லி. அளவிலேயே ஆல்கஹால் பயன்பாடு இருக்கும். சமூக வலைதளங்களில் குறிப்பிடப்படும் '95 சதவீத ஆல்கஹால்' என்பது பயன்படுத்தப்படும் ஆல்கஹாலின் தூய தன்மையைக் குறிக்கும் தொழில்நுட்பச் சொல் மட்டுமே தவிர, மருந்தின் மொத்த அளவு அல்ல என்று சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து மருந்துகளும் 180 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இது தவிர, அரசு மருத்துவ நிறுவனங்களில் விநியோகிக்கப்படும் மருந்துகளும் அவ்வப்போது கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுத் தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் தேர்வு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:13:09 AM (IST)

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)








