» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் தேர்வு!

ஞாயிறு 26, ஜூலை 2026 9:13:09 AM (IST)

Photographei43i.jpg

திருநெல்வேலி மாவட்ட புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் 2026 - 2028-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் டி.வி.பி.ஏ (TVPA) மாநிலத் தலைவர் ஓ.கே. பிரேம்லால், டி.வி.பி.ஏ காக்கும் கரங்கள் அறக்கட்டளையின் ஏ. சிவகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.என். பொன்னுசுவாமி, மாநில இணைச் செயலாளர் கே. செந்தில்குமரன் மற்றும் மண்டலம் 10-ன் செயலாளர் ஜி. ஐயப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

தேர்தல் அதிகாரிகளாக ஏ. தாமஸ் அன்பழகன் மற்றும் யு. முத்தையா செயல்பட்டுத் தேர்தலை நடத்தினர். விழாவின் போது, 'காக்கும் கரங்கள்' நலத் திட்டத்தில் புதிதாக 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இவ்விழாவில் 2026 - 2028-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் தலைவராக சோமசுந்தரம், செயலாளராக செல்வ கணேசன், பொருளாளராக அருணாச்சலம் மற்றும் அமைப்பாளராக கல்யாணசுந்தரம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் துணைத் தலைவர்களாக அருணாச்சலம் மற்றும் பிரவீன் ஜான் வினோத் ஆகிய இருவரும், இணைச் செயலாளர்களாக தங்கம் மற்றும் பிரவீன் ஜீவானந்தம் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புகைப்படக் கண்காட்சி

விழாவின் ஒரு பகுதியாகப் பிரம்மாண்ட புகைப்படக் கண்காட்சியும், சேலத்தைச் சேர்ந்த ஆர். கௌரிசங்கர் வழங்கிய புகைப்படக் கலை குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்பும் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு புகைப்படக் கலைஞர்கள் பல பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவில் மைக்ரோடெக் நிறுவனம் சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory