» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது திருவட்டார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப் பாலம் சுற்றுலாத் தலப் பகுதியில் அரசு அனுமதியின்றி வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசு இந்த உத்தரவை அமல்படுத்தாததைக் கண்டித்து, கடந்த ஜூலை 12, 2026 அன்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அமைதியான முறையில், போக்குவரத்து மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிட்டு ஒழுங்கு நடைமுறைகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எந்தவித சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்படாத சூழலில், திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிக் காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அதே போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளைத் தற்போதைய தவெக அரசும் கையாண்டு வருகிறது. எனவே, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர் : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:39:13 AM (IST)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)

என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 11:05:39 AM (IST)

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)









