» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி!

வியாழன் 16, ஜூலை 2026 11:38:11 AM (IST)

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு  நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 இல் ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 19 குழந்தைகள் காயமடைந்தனர். இத்துயரச் சம்பவத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நினைவு தினத்தை முன்னிட்டு விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர், தங்களது இல்லங்களில் உள்ள குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள் மற்றும் தின்பண்டங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி முன்பாகப் பெற்றோர் திரண்டனர். அங்குப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனருக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் மற்றும் தின்பண்டங்களை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory