» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள்: கோ.ப.அன்பழகன் வழங்கினார்!

செவ்வாய் 14, ஜூலை 2026 4:53:14 PM (IST)

11MLMRKulatheivam.jpg

மேல்மருவத்தூா் சித்தா் பீட நிறுவனரும், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் தந்தையுமான து.கோபால் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு, ஏழை பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டது. 

மேல்மருவத்தூா் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் தந்தை து.கோபால் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு சித்தா் பீடம் அருகே அவரது நினைவிடத்தில்  நல உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கி, 2 இலவச திருமணங்களையும் நடத்தி வைத்தாா். 

இந்நிகழ்வில் அவர் பேசுகையில், "பெற்றோரிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் நம்மிடம் பணமோ, பொருளோ எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றுதான். இன்று கலந்து காெண்ட அனைவருக்கும் அன்னையின் அருளாசி கிடைக்கும் என்றார்.

MLMRKulatheivam.jpg

இவ்விழாவில் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆணையருமான ஆனந்த் குமாா், மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அகத்தியன், முன்னாள் எம்.பி துரை (வந்தவாசி), ஆதிபராசக்தி லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி செயலா் மருத்துவா் மதுமலா், மருத்துவக் கல்லூரி முதல்வா் கண்ணன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளியோா்களுக்கு தையல் இந்திரங்கள், பீரோகள், டீகேன், வீட்டு உபயோக பொருள்கள், பள்ளி குழந்தைகளுக்கான பள்ளி கைப்பைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, து.கோபால் நாயக்கா் திருவுருவ படத்துக்கு இயக்க துணை தலைவா் கோ.ப.அன்பழகன் மலா்மாலை அணிவித்து சிறப்பு வழிபாட்டினை செய்தாா். அதனை தொடா்ந்து சிறப்பு விருந்தினா்கள், செவ்வாடை பக்தா்கள், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்வாகிகள், ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி பேராசிரியா்கள் உள்பட பலா் மலா் தூவி அஞ்சலியை செலுத்தினாா்கள். 

1MLMRKulatheivam.jpg

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், தேனி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள், தாெண்டு இயக்கத்தினர் கலந்து கொணடனர். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க மாவட்ட தலைவா் சரளா, மேல்மருவத்தூா் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்வாகிகள் சதீஷ்குமாா், லிங்கநாதன், சிவகுமாா் உள்ளிட்டோா் செய்து இருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory