» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 4,41,667 மோதிரங்கள் கொள்முதல்: டெண்டர் அறிவிப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 10:19:34 AM (IST)

தமிழ்நாடு அரசின் 'வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டத்தின்' கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான' கொள்முதல் ஒப்பந்தப் புள்ளிகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,725 என்ற விலையில் கொள்முதல் செய்ய இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்கள் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 17 வரை இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. தமிழர் பண்பாட்டு மரபான 'தாய்மாமன் சீர்' முறையைப் பிரதிபலிக்கும் வகையில், அரசு இப் பொறுப்பை ஏற்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி, இலவச பிரசவம், கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மென்பொருள் (PICME) போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக, அரசு சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று முதல்-அமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் தேர்வு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:13:09 AM (IST)

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)








