» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 12:09:08 PM (IST)
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்யக் கோரிய பொதுநல வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: "தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, தேசிய கீதத்துடன் நிறைவு செய்யப்படுவது பல ஆண்டுகளாக மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அண்மைக்காலமாகச் சில அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது."
"அரசு நிகழ்ச்சிகளை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், மாநிலப் பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க எந்தத் தடையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல; அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாகத் திகழ்கிறது.
எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இத்தகைய கலாசார மோதல்களைத் தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்குத் தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்," என மனுதாரர் கோரியிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)









