» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வராகும் முன்பே, விஜய் போர்ஜரியில் ஈடுபடுகிறார் : டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

சனி 9, மே 2026 12:23:27 PM (IST)



தவெகவுக்கு ஆதரவு என அமமுக எம்எல்ஏ காமராஜ் அளித்ததாக கூறும் ஒரிஜினல் கடிதம் எங்கே என்றும், விஜய் முதல்வராகும் முன்பே போர்ஜரியில் ஈடுபடுகிறார் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அடையாறில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: காமராஜ் சுயநினைவோடு எழுதியதாக கூறும் தவெகவினர் அசல் காப்பியை வெளியிடுங்கள். காமராஜ் கையெழுத்திட்ட வீடியோவின் உண்மைதன்மையை வெளியிடுவார்களா. காமராஜ் காரில் உட்கார்ந்து கையெழுத்திடும் வீடியோவை விஜய் எடுத்தாரா? புஸ்ஸி ஆனந்த் எடுத்தாரா?

மாலை 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க தனது ஆதரவு கடிதத்தை காமராஜ் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும் போது விஜய்க்கு எப்படி அவர் கையெழுத்திடுவார். தவெக கூறுவது போல் காமராஜ் கையெழுத்திட்டிருந்தால் அந்த காப்பி எங்கே, ஏன் அவரையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்றிருக்கலாமே! என்னை பயமுறுத்தவும் என்டிஏ கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவும் இந்த முயற்சி நடந்துள்ளது.

காமராஜ் ஒன்றும் சிறுப்பிள்ளை அல்ல, படத்தை பார்த்துவிட்டு விஜய் பின்னால் செல்வதற்கு. எனவே காமராஜ் கையெழுத்து போடும் வீடியோ செயற்கை நுண்ணறிவில் செய்யப்பட்டது. நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்.

தவெகவினர் வீடியோவை போலீஸில் கொடுத்தால் அது உண்மையா இல்லை போலியா என்பது தெரிந்து விட போகிறது. எனவே காமராஜிடம் குதிரை பேரம் செய்வதற்காகவே போலி கடிதத்தை விஜய் கொடுத்துள்ளார். விஜய் என்ன எங்களுக்கு மாமனா, மச்சானா, காமராஜ் ஏன் அவருக்கு கையெழுத்து போட போகிறார். இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை தினகரன் எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory