» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதலமைச்சர் விஜய் மக்களுக்காகவே உழைப்பார் : நடிகர் ஸ்ரீமன் உற்சாக பதிவு!
திங்கள் 4, மே 2026 12:28:53 PM (IST)
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமன் 'மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு' என உற்சாகமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வரை விஜய்-யின் தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதனிடையே விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமான் தனது எக்ஸ் பக்கத்தில் 'மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு' என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 1998-ஆம் ஆண்டில், எனது நண்பரான முதலமைச்சரிடம் இதை எடுத்துரைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மக்களே, உங்களுக்கு என் நன்றி! 'மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு' ஆகும். நமது முதலமைச்சர் உங்களுக்காகவே உழைப்பார். அவர் உள்ளத்தால் மிகவும் நேர்மையானவர். ஒருமுறை அவர் வாக்குறுதி அளித்துவிட்டால், தன் சொல்லைக் காப்பாற்ற அவர் தன்னால் இயன்றவரை முழு முயற்சி மேற்கொள்வார்; அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அவர் முழு மனதுடன் உழைப்பார். என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஆளுநருக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்!
வியாழன் 7, மே 2026 5:56:39 PM (IST)

திமுகவாக இருந்தால் இந்நேரம்.. பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஷாநவாஸ் கேள்வி!
வியாழன் 7, மே 2026 5:09:50 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வு : ஸ்ரீதர் வேம்பு அதிரடி கருத்து!
வியாழன் 7, மே 2026 4:13:57 PM (IST)

ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு: அப்போ புரியல, இப்போ புரியுது - கஸ்தூரியின் பதிவு வைரல்!
வியாழன் 7, மே 2026 3:33:39 PM (IST)

மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு பதவிப் பிரமாணம் - ஆளுநர் திட்டவட்டம்!
வியாழன் 7, மே 2026 3:19:21 PM (IST)

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் : ஆளுநரை மீண்டும் சந்தித்து விஜய் உரிமை கோரல்!
வியாழன் 7, மே 2026 12:18:13 PM (IST)










