» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஆளுநருக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்!

வியாழன் 7, மே 2026 5:56:39 PM (IST)



தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது, தமிழக மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், மக்கள் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. இந்தச் சூழலில் மக்களின் தீர்ப்பைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது. மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்" என்று அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் முதிர்ச்சியை வரவேற்பதாகக் கமல் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என நினைவூட்டியுள்ள அவர், "விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது மாநிலத்திற்கு நேரும் அவமானம்" என்று கூறியுள்ளார். பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்கைக் குரல்: தான் பேசுவது கட்சி அரசியல் அல்ல என்றும், ஓர் இந்தியக் குடிமகனாகத் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்ற கொள்கைக் குரலே இது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருப்பது மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம் என்று வருத்தம் தெரிவித்துள்ள கமல்ஹாசன், ஆளுநர் உடனடியாக அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory