» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு பதவிப் பிரமாணம் - ஆளுநர் திட்டவட்டம்!

வியாழன் 7, மே 2026 3:19:21 PM (IST)



தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் தாமதம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் நிரூபிக்கவில்லை. போதுமான பலத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும்.

சட்டசபையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், நிலையான அரசை வழங்கப் போதுமான பலம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு நிரூபிக்கும் பட்சத்தில், அடுத்த நிமிடமே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப் பிரிவு 361-ன் கீழ் எளிதில் கேள்வி கேட்க முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆலோசனை

இன்று ஆளுநரைச் சந்தித்து 40 நிமிடங்கள் பேசிய விஜய், "முதலில் எங்களைப் பதவியேற்க அனுமதியுங்கள், பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்" என வலியுறுத்தியிருந்தார். ஆனால், ஆளுநர் அதற்கு உடன்படாத நிலையில், விஜய் தற்போது பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

செங்கோட்டையன் ஆலோசனை:

மறுபுறம், பனையூரில் தவெக எம்.எல்.ஏ-க்களுடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் பதவியேற்பு விழா தாமதமாவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தவெக-வின் 108 இடங்கள் மற்றும் காங்கிரஸின் 5 இடங்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே தற்போது ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள 5 இடங்களுக்கான ஆதரவைத் திரட்டினால் மட்டுமே ஆளுநரின் அழைப்பு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory