» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு : 6-வது சுற்றிலும் தவெக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 11:54:22 AM (IST)
கொளத்தூர் தொகுதியில் 6-வது சுற்றிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். 19,804 வாக்குகள் பெற்று தவெக பாபு முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தொகுதி முன்னிலை நிலவரத்தின்படி தவெக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதிமுக 2வது இடத்திலும் திமுக 3வது இடத்திலும் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி 234 தொகுதிகளில் த.வெ.க. 102, அ.தி.மு.க. கூட்டணி 81, தி.மு.க.கூட்டணி 51 ஆகிய இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் 6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார். கொளத்தூரில் 19,804 வாக்குகள் பெற்று தவெக பாபு முன்னிலையில் உள்ளார். மு.க.ஸ்டாலின் 17,975 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஆளுநருக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்!
வியாழன் 7, மே 2026 5:56:39 PM (IST)

திமுகவாக இருந்தால் இந்நேரம்.. பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஷாநவாஸ் கேள்வி!
வியாழன் 7, மே 2026 5:09:50 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வு : ஸ்ரீதர் வேம்பு அதிரடி கருத்து!
வியாழன் 7, மே 2026 4:13:57 PM (IST)

ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு: அப்போ புரியல, இப்போ புரியுது - கஸ்தூரியின் பதிவு வைரல்!
வியாழன் 7, மே 2026 3:33:39 PM (IST)

மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு பதவிப் பிரமாணம் - ஆளுநர் திட்டவட்டம்!
வியாழன் 7, மே 2026 3:19:21 PM (IST)

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் : ஆளுநரை மீண்டும் சந்தித்து விஜய் உரிமை கோரல்!
வியாழன் 7, மே 2026 12:18:13 PM (IST)










