» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக தலைவர் விஜய் வீட்டில் துணை ராணுவம் குவிப்பு - 2 அடுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு!
திங்கள் 4, மே 2026 11:12:29 AM (IST)
சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டை சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வருவதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில், அவருக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவிக்க ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் அங்கு திரண்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட நிலவரங்கள் வெளியானது முதலே தமிழக அரசியல் களம் பெரும் அதிர்வலைகளைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட மூத்த அமைச்சர்கள் பலரே பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாகவே தங்கள் தொகுதிகளில் அசைக்க முடியாத சக்திகளாக இருந்த அமைச்சர்கள் வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியிருப்பது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தமிழக அரசியலில் புதிய வரவாக களமிறங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தவெக பெற்று வரும் வாக்குகள் ஒட்டுமொத்த தமிழகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு அக்கட்சிக்கு அமோகமாக இருப்பதை தற்போதைய தேர்தல் நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக உருவெடுத்துள்ள விதம், தேர்தல் களத்தின் போக்கையே மாற்றி அமைத்திருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஆளுநருக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்!
வியாழன் 7, மே 2026 5:56:39 PM (IST)

திமுகவாக இருந்தால் இந்நேரம்.. பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஷாநவாஸ் கேள்வி!
வியாழன் 7, மே 2026 5:09:50 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வு : ஸ்ரீதர் வேம்பு அதிரடி கருத்து!
வியாழன் 7, மே 2026 4:13:57 PM (IST)

ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு: அப்போ புரியல, இப்போ புரியுது - கஸ்தூரியின் பதிவு வைரல்!
வியாழன் 7, மே 2026 3:33:39 PM (IST)

மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு பதவிப் பிரமாணம் - ஆளுநர் திட்டவட்டம்!
வியாழன் 7, மே 2026 3:19:21 PM (IST)

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் : ஆளுநரை மீண்டும் சந்தித்து விஜய் உரிமை கோரல்!
வியாழன் 7, மே 2026 12:18:13 PM (IST)










