» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)
திருச்சூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியைச் சேர்ந்த உன்னி மாயா (30), அனக்கல் பகுதியைச் சேர்ந்த சிவபிரசாத் (35) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவபிரசாத் உள்ளூர் சந்தையிலும், உன்னி மாயா திருச்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.
உன்னி மாயாவின் நடத்தையில் சிவபிரசாத் அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தம்பதியினரிடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நேற்று காலை உன்னி மாயா வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிவபிரசாத் உன்னி மாயாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், இச்சம்பவம் குறித்துத் தனது தாயாரிடம் சிவபிரசாத் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் அளித்தார்.
உடனடியாக வீட்டிற்கு விரைந்த பொதுமக்கள், மயங்கிய நிலையில் இருந்த உன்னி மாயாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சிவபிரசாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஆளுநருக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்!
வியாழன் 7, மே 2026 5:56:39 PM (IST)

திமுகவாக இருந்தால் இந்நேரம்.. பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஷாநவாஸ் கேள்வி!
வியாழன் 7, மே 2026 5:09:50 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வு : ஸ்ரீதர் வேம்பு அதிரடி கருத்து!
வியாழன் 7, மே 2026 4:13:57 PM (IST)

ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு: அப்போ புரியல, இப்போ புரியுது - கஸ்தூரியின் பதிவு வைரல்!
வியாழன் 7, மே 2026 3:33:39 PM (IST)

மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு பதவிப் பிரமாணம் - ஆளுநர் திட்டவட்டம்!
வியாழன் 7, மே 2026 3:19:21 PM (IST)

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் : ஆளுநரை மீண்டும் சந்தித்து விஜய் உரிமை கோரல்!
வியாழன் 7, மே 2026 12:18:13 PM (IST)










