» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி: நுங்கு பறிக்க முயன்றபோது சோகம்!
வெள்ளி 1, மே 2026 8:48:22 AM (IST)
சுங்குவார்சத்திரம் அருகே ஏரிக்கரை ஓரம் பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த அற்புதம் என்பவரின் மகன் தட்சணாமூர்த்தி (17) . இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் டில்லி கணேஷ் (17). இவர் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் சிறுமாங்காடு கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே பனை மரத்தில் இரும்பு கம்பி மற்றும் மூங்கிலைப் பயன்படுத்தி நுங்கு பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது நுங்கு குலை எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்கம்பியில் சிக்கிக்கொண்டது. அதனை எடுக்க முயன்றபோது, கையில் இருந்த இரும்பு கம்பி உயர் அழுத்த மின்சாரம் செல்லும் கம்பியில் உரசவே, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோடை விடுமுறையில் நுங்கு பறிக்கச் சென்ற மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஆளுநருக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்!
வியாழன் 7, மே 2026 5:56:39 PM (IST)

திமுகவாக இருந்தால் இந்நேரம்.. பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஷாநவாஸ் கேள்வி!
வியாழன் 7, மே 2026 5:09:50 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வு : ஸ்ரீதர் வேம்பு அதிரடி கருத்து!
வியாழன் 7, மே 2026 4:13:57 PM (IST)

ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு: அப்போ புரியல, இப்போ புரியுது - கஸ்தூரியின் பதிவு வைரல்!
வியாழன் 7, மே 2026 3:33:39 PM (IST)

மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு பதவிப் பிரமாணம் - ஆளுநர் திட்டவட்டம்!
வியாழன் 7, மே 2026 3:19:21 PM (IST)

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் : ஆளுநரை மீண்டும் சந்தித்து விஜய் உரிமை கோரல்!
வியாழன் 7, மே 2026 12:18:13 PM (IST)










