» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)
கடும் கோடை வெயில் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணைகளான காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, இரு அணைகளிலும் நடைபெற்று வந்த மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லாததாலும், கோடையின் தாக்கத்தாலும் அணைகளுக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. இதனால் காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்த 52 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் குறைந்ததால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் மற்றும் எந்திரங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்: "தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும், கடந்த காலங்களில் (மழைக்காலங்களில்) இந்த அணைகளில் இருந்து இலக்கை விடக் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக நிறுத்தம் மின் விநியோகத்தில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தாது. இருப்பினும், கோடை மழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஆளுநருக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்!
வியாழன் 7, மே 2026 5:56:39 PM (IST)

திமுகவாக இருந்தால் இந்நேரம்.. பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஷாநவாஸ் கேள்வி!
வியாழன் 7, மே 2026 5:09:50 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வு : ஸ்ரீதர் வேம்பு அதிரடி கருத்து!
வியாழன் 7, மே 2026 4:13:57 PM (IST)

ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு: அப்போ புரியல, இப்போ புரியுது - கஸ்தூரியின் பதிவு வைரல்!
வியாழன் 7, மே 2026 3:33:39 PM (IST)

மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு பதவிப் பிரமாணம் - ஆளுநர் திட்டவட்டம்!
வியாழன் 7, மே 2026 3:19:21 PM (IST)

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் : ஆளுநரை மீண்டும் சந்தித்து விஜய் உரிமை கோரல்!
வியாழன் 7, மே 2026 12:18:13 PM (IST)










