» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:51:20 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்துத் தேர்தல் பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஷ்தவா இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள், வாகனச் சோதனைச் சாவடிகள் மற்றும் பறக்கும் படைகளின் செயல்பாடுகளைப் பொதுப் பார்வையாளர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இன்றைய ஆய்வின் போது ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாழைத்தோட்டம் R.C தொடக்கப்பள்ளி, குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செல்வமருதூர் குழந்தைகள் மையம் மற்றும் இந்து தொடக்கப்பள்ளி, கீழ உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி இந்து நடுநிலைப்பள்ளி, கூட்டப்பனை புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி, கூடுதாழை புனித தாமஸ் ஆர்.சி தொடக்கப்பள்ளி, கோட்டைகருங்குளம் சுப்பிரமணிய முதலியார் நினைவு நடுநிலைப்பள்ளி, கஸ்தூரிரெங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, முடவன்குளம் பி.எஸ்.எஸ். நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இந்த மையங்களில் வாக்காளர்களுக்கான குடிநீர், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் விரிவான ஆய்வு நடத்தினார். வாக்குச்சாவடி ஆய்வைத் தொடர்ந்து, ராதாபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்குச் சென்ற பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஷ்தவா, அங்கு வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)

குமரியில் ஏப்ரல் 12-ல் விஜய் தேர்தல் பிரச்சாரம்: தவெக தொண்டர்கள் உற்சாகம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:29:22 PM (IST)

குமரி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு: புகார் எண்கள் அறிவிப்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:20:50 PM (IST)

தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் எடப்பாடி பழனிசாமி: கனிமொழி எம்.பி. காட்டம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 3:58:58 PM (IST)

மழைக்கு மத்தியிலும் அதிகரிக்கும் வெப்பம்: அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 3:47:25 PM (IST)

தொகுதி மறுவரையறையில் ஏன் இந்த அவசியமற்ற அவசரம்? - பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி!
வியாழன் 9, ஏப்ரல் 2026 3:38:17 PM (IST)







