» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தன்னையும் மக்களையும் நம்பாதவரே இரு தொகுதிகளில் போட்டி: விஜய் மீது சீமான் விமர்சனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:00:26 AM (IST)
தன்னையும், மக்களையும் நம்பாதவர் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று என விஜய்யை சீமான் மறைமுகமாகச் சாடினார்.
கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது திமுக அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை அவர் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்துப் பேசிய சீமான்: "ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக, தற்போது பதவிக்காலம் முடியும் நேரத்தில் மக்களிடம் வந்து 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது. அப்படியென்றால், இத்தனை காலமும் மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா? முதல்வர் ஸ்டாலின் உண்மையாகவே நல்லாட்சி தந்திருந்தால், மக்களே 'உங்கள் ஆட்சி தொடரட்டும்' என்று சொல்லியிருப்பார்கள். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இப்போதுதான் மக்களின் குறைகளைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்கிறோம் என்கிறார்கள். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளே தெரியாமல் தான் இவர்கள் இத்தனை காலம் ஆட்சி நடத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் சீமான் கூறுகையில்: நாங்கள் எப்போதும் தனித்தே பயணிக்கிறோம். பொதுத்தேர்தலில் நான்கு முறை தோல்வியைத் தழுவினாலும், சோர்வின்றி உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறோம். தன்னையும், மக்களையும் நம்பாதவர் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார். நான் இரண்டு முறை தோல்வியடைந்த போதும், மக்கள் மீதும் என் மீதும் உள்ள நம்பிக்கையால் மீண்டும் ஒரே தொகுதியில் தான் களம் காண்கிறேன்," என விஜய்யை மறைமுகமாகச் சாடினார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்துப் பேசிய அவர், "தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகப் பணம் பெற்றது பாஜகவும் திமுகவும் தான். ஆனால், ஒரு ரூபாய் கூட அதுபோன்ற நிதியைப் பெறாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்" எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:01:05 PM (IST)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

இலவசமாக மணல் கேட்டு மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் - காவலர் பணி இடைநீக்கம்: எஸ்.பி., அதிரடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:41:43 AM (IST)

டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம்: ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி!
புதன் 1, ஏப்ரல் 2026 5:26:46 PM (IST)

4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி: வைகோ அறிவிப்பு
புதன் 1, ஏப்ரல் 2026 5:21:27 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு
புதன் 1, ஏப்ரல் 2026 4:43:34 PM (IST)







