» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலவசமாக மணல் கேட்டு மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் - காவலர் பணி இடைநீக்கம்: எஸ்.பி., அதிரடி!

வியாழன் 2, ஏப்ரல் 2026 8:41:43 AM (IST)

நெல்லையில் வீடு கட்டுவதற்கு இலவசமாக மணல் கேட்டுத் தொழில் அதிபரை மிரட்டிய புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் பாலாமடை பகுதியில் கிரஷர் மற்றும் எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது நிறுவனத்திற்கு வந்த இரண்டு போலீசார், தாங்கள் வீடு கட்டுவதற்கு இலவசமாக மணல் தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துச் சுந்தரராஜன் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமாரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது: "தாழையூத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் எனது கிரஷருக்கு வந்து, எம்.சாண்ட் மணலை இலவசமாகத் தர வேண்டும் என்று கேட்டனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், என்னைத் தகாத வார்த்தைகளால் மிரட்டிவிட்டுச் சென்றனர்."

தொழில் அதிபரின் புகாரைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேற்று அதிரடி உத்தரவிட்டார்.

காவல்துறையைச் சேர்ந்தவர்களே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இலவசமாக மணல் கேட்டு மிரட்டிய சம்பவமும், அதற்கு உடனடியாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையும் நெல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Apr 2, 2026 - 12:05:42 PM | Posted IP 172.7*****

அந்த 2 பேரின் படத்த போட்டு விடுங்க.... FILE பண்ணணும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory