» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பத்மநாபபுரம் தவிர மற்ற 5 தொகுதிகளில் மொத்தம் 15 பேர் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தொகுதிகள் வாரியாக மனுத் தாக்கல் விவரம் :
நாகர்கோவில் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான சு. காளீஸ்வரியிடம் அதிகபட்சமாக 7 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
நாம் தமிழர் கட்சி (நாதக): மு. முத்துக்குமார்.
சுயேச்சைகள்: பி. முகைதீன் பைஜி, சா. ரெத்தினமணி, ஜே. ஆன்றனி மைக்கேல், ஏ. சலேட் கனகராஜ், நாகூர் மீரான் பீர்முகமது, ஏ. அஜித்குமார்.
கன்னியாகுமரி: தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்பாதேவியிடம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கிருஷ்ணகுமார், கனகராஜ் ஆகிய 3 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
குளச்சல்: குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கலைமதியிடம், நாதக வேட்பாளர் ஆன்சி ஷோபா ராணி மற்றும் சுயேச்சை வேட்பாளர் அந்தோணிமுத்து ஆகிய இருவர் மனு அளித்தனர்.
விளவங்கோடு: தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தூர்ராஜனிடம், நாதக வேட்பாளர் மரியஸ்டெல்லா மற்றும் சுயேச்சை வேட்பாளர் அனிதா ஆகிய இருவர் மனுத் தாக்கல் செய்தனர்.
கிள்ளியூர்: தேர்தல் நடத்தும் அலுவலர் ஈஸ்வரனிடம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிம்லர் ஒருவர் மட்டும் மனுத் தாக்கல் செய்தார்.
பத்மநாபபுரத்தில் மந்தம்
மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தொகுதியில் முதல் நாளில் ஒருவர்கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளிலேயே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைத்துத் தொகுதிகளிலும் மும்முரமாக மனுத் தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் : மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சேரன்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:10:13 PM (IST)

தனி தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர் வேட்புமனு தள்ளுபடி: இந்து முன்னணி வலியுறுத்தல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:05:02 PM (IST)

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

விஜய் மீது வழக்கு: டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 3:30:09 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:49:36 AM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)







