» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!

செவ்வாய் 31, மார்ச் 2026 11:49:36 AM (IST)



தஞ்சை அருகே தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்ற திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வாகனத்தை மறித்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் சென்றடைந்தார். அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை வழியாகத் திருவாரூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.

அவர் தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முதல்வரின் வாகனத்தை நிறுத்தினர். உரிய விதிமுறைகளின்படி, அதிகாரிகள் வாகனத்திற்குள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது முதல்வர் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கண்டறியப்படாததைத் தொடர்ந்து, வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

சோதனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவகத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இன்று வாக்கு சேகரிக்கிறார். கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி சோதனைச் சாவடி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல்வரின் வாகனத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory