» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு

செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)



கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டு வருவதை நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு செய்தார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டுவருவதை நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் சரண் ஜோஸ், ஐ.ஆர்.எஸ்., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- 

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் விதம், ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுவது உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் புழக்கம் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொண்டு, சரியான முறையில் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், அதேசமயம் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாத வண்ணமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

முன்னதாக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory