» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக அரசின் அலட்சியத்தால் மக்கள் பலியாக வேண்டுமா? - நயினார் நாகேந்திரன் சாடல்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:12:22 PM (IST)
சேலம் அருகே அரசுப் பேருந்து மோதி நிகழ்ந்த கோர விபத்து குறித்துத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "சேலம் அருகே அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று சரக்கு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். தமிழக அரசின் அலட்சியமே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், திமுக அரசை 'தீயசக்தி' என விமர்சித்துள்ளார்.
தங்கள் ஊழல் கஜானாவை நிரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில், அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை அடமானம் வைக்கத் துடிக்கும் திமுக போன்ற ஒரு தீயசக்தியைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனி அவர்களை அரியணையில் ஏறவும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்."
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் புகார்கள் இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே பொதுமக்களின் உயிரிழப்புக்குக் காரணம் என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)








