» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தான் வெளியேறப்போவதாகப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று அக்கட்சியின் நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அக்கட்சியில் தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்துச் சரத்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: பாஜவில் இருந்து வெளியேறப் போவதாகக் கூறப்படுவது ஒரு வதந்தி. கட்சியில் தமக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனக் கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.நாளை நடைபெறவுள்ள ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். இதில் அரசியல் மாற்றங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம், பாஜகவில் தான் தொடர்ந்து நீடிப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)








