» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!

ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவாக ஒருபோதும் இணையாது என்றும் வேல்முருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அறிவித்துள்ளார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவாக ஒருபோதும் இணையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியே கூட்டணி முறிவிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தி வந்தார்.

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு, அரசுப் பணிகளில் தமிழர்களுக்கே 100% முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார். இருப்பினும், முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டதால், வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

திமுகவிலிருந்து வெளியேறிய நிலையில், அதிமுக தரப்பில் 2 அல்லது 3 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ளதாகவும், வேல்முருகனின் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக எழுந்த யூகங்களுக்கு வேல்முருகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருபோதும் இடம்பெறாது; எங்களது அடுத்தகட்ட கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று அவர் இன்று (மார்ச் 22) தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory