» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பேருந்து மோதி கோர விபத்து : 11 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 3:41:14 PM (IST)

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் பகுதியில் இன்று நிகழ்ந்த கோர விபத்தில், அரசுப் பேருந்து மோதி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சுமார் 30 பயணிகளுடன் இன்று மதியம் 12 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. உத்தமசோழபுரம் அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் திடீரென பழுதடைந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓடி எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் (டிப்பர் வேன்) மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், சரக்கு வாகனத்தில் வந்த சிறுமி, 11 மாத குழந்தை மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், டிப்பர் வேனில் வந்து படுகாயமடைந்த 4 பேர் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு:
விபத்து நடந்தவுடன் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், விபத்துக்குக் காரணமான அரசுப் பேருந்தை அடித்து நொறுக்கினர். இதனால் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொண்டலாம்பட்டி போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)









காரணம்Mar 20, 2026 - 05:22:13 PM | Posted IP 172.7*****