» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் சென்றடைகின்றன : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பெருமிதம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:54:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் சென்றடைகின்றன என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சமத்துவ நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில்நடைபெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆதிதிராவிட நலத்துறை மூலம் வீட்டுமனை பட்டாக்கள் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டாக்கள் தற்போது கணினி பட்டாவாக வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்காக வன உரிமை பட்டா வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வன உரிமை பட்டா வழங்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சுமார் 247 பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியின மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணைகள் வழங்கப்பட்டது.
மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் 1800 நபர்களுக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. இந்த வருடம் சுமார் 2000 நபர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வருடம் 178 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டது. இந்த வருடம் 313 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த வீடுகள் மறு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பழைமை வாய்ந்த கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்ய தலா ரூ.2.50 இலட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. மேலும் தாட்கோ துறையின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயில கல்விக்கடன் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் மதிப்பில் விரிவான காப்பீடு திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். கூட்டுறவுத் துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு மாத உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொல்குடி திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1 கோடி மதிப்பில் நிதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களை சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தங்களின் கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை சந்தித்தோ, அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ கோரிக்கைகளை வைத்தால் உடனடியாக அவற்றை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மாதம் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட புறாவிளை பகுதியில் கள ஆய்வுக்கு சென்றிருந்தபோது அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரவும், அவர்களுக்கு ஜாதி சான்றிதழ், பட்டா, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து பத்மநாபுரம் சார் ஆட்சியர் உரிய இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டு, உடனடி நடவடிக்கை எடுத்து சுமார் 300 நபர்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் வழங்கி உள்ளார்கள். இன்று இந்நிகழ்ச்சியில் புறா விளை பகுதியை சார்ந்த மக்களுக்கு அதிகளவு பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.28.84 இலட்சம் மதிப்பில் 28 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா, 6 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 6 பயனாளிகளுக்கு சலவை பெட்டியும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 231 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான சான்றிதழ்களும், ஊராட்சிகள் துறையின் சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூ.4.03 கோடி மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டும் உத்தரவு (work order), தாட்கோ துறையின் சார்பில் ரூ.32.09 இலட்சம் மதிப்பில் 6 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின்கீழ் கடனுதவிகளும், ரூ.2.11 கோடி மதிப்பில் 59 பயளாளிகளுக்கும் வீடு கட்டும் உத்தரவு (work order) உட்பட மொத்தம் 1227 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். முன்னதாக சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாளையொட்டி அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஷேக் அப்துல் காதர், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, இணை பதிவளார் கூட்டுறவு சிவகாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை: சட்டப்பேரவையில் புதிய மசோதாவை தாக்கல்!
சனி 26, ஏப்ரல் 2025 5:48:56 PM (IST)

பெண்ணை இழிவாகப் பேசுவது சுயமரியாதை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு
சனி 26, ஏப்ரல் 2025 5:03:44 PM (IST)

தோவாளை பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 4:56:58 PM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)

த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 26, ஏப்ரல் 2025 12:29:48 PM (IST)
