» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 26, ஏப்ரல் 2025 12:29:48 PM (IST)

த.வெ.க., பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கோவை வந்துள்ளார். அவருக்கு கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும்(ஏப்.26), நாளையும் (ஏப்27) என இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கோவை வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்திருந்த அவரை, அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.
கைகளில் வரவேற்பு பதாகைகளை வைத்திருந்த ரசிகர்களில் ஒருபிரிவினர், விஜயை பார்த்து கைகளை அசைத்தும், குரல் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன் பின்னர், நடிகர் விஜய் நேரடியாக பிரபல தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றார். மதியம் 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










