» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு

சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)



திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் மற்றும் திருநங்கைகளுக்கான குறைதீர் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.04.2025) மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் திருநங்கைகள் தினம் மற்றும் திருநங்கைகளுக்கான குறைதீர் நாள் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு திருநங்கையர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவி குழு மானியம், தேவையின் அடிப்படையில் கல்வி தகுதியின் அடிப்படையில் திறன் வளர்ப்பு பயிற்சி, கூட்டுறவுத்துறை சார்பில் சுயதொழில்புரிய கடன் உதவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடும்ப அட்டை, மாவட்ட திட்ட அலுவலகம் (CMCHIS) சார்பில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சார்பில் ஓய்வூதியம், தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆட்டோ மானியம் 1 இலட்சம் வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் (TACTV) சார்பில் ஆதார் அட்டை, வருவாய்துறை சார்பில் வீட்டுமனை பட்டா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வீடு, மாவட்ட சமூகநலத்துறை சார்பில் திருநங்கை அடையாள அட்டை, தையல் இயந்திரம் ஆகிய திருநங்கையர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருநங்கைகள் தினம் ஏப்ரல் 15 நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு திருநங்கைகளுக்கான நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, அழகி போட்டி, சமையல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசுகளும், சுயதொழில் சிறப்பாக செய்து வரும் திருநங்கைகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள். 

தொடர்ந்து நடைபெற்ற திருநங்கையர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருநங்கையர்களிடம் பல்வேறு குறைகள் குறித்து கேட்டறிந்தார்கள். திருநங்கைகள் அதிகம் வசித்து வரும் பகுதியான நரசிங்கநல்லூரில் சாலை வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர். வசிக்கும் பகுதியில் இரண்டு சாலைகளை சீரமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உடனடியாக சரிசெய்யப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

மேலும், வீடு இல்லாதவர்களுக்கு விரைவில் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நரசிங்கநல்லூர் பகுதியில் குடிநீர் வசதி மேம்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. திருநங்கையர்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தெரிவித்தார்கள். 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட சமூக நல அலுவலர் தாஜூன்னிசா பேகம், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெப்ரின் கிரேசியா, மற்றும் அலுவலர்கள், திருநங்கையர்களுக்கான தொண்டு நிறுவனர் கனி திருநங்கையர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory