» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடத்தல் வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது
சனி 12, ஏப்ரல் 2025 5:10:46 PM (IST)
தென்காசி அருகே கடத்தல் வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை பணகுடியைச் சேர்ந்த விவசாயி மணி என்பவரது மகன் செல்வகுமார். இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற செல்வ குமார், கடையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை செல்வகுமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விரைந்து வெளியே எடுத்து தருவதாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா தெரிவித்துள்ளார்.
லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவிடம் அவர் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த பால்குதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் சென்றடைகின்றன : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பெருமிதம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:54:27 PM (IST)

மின்சாரம் பாய்ந்து 7 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி : விருதுநகர் அருகே சோகம்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:05:39 PM (IST)

இன்ஸ்டாகிராமில் மோதலை தூண்டும் வீடியோ பதிவு: நெல்லை வாலிபர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:00:35 PM (IST)

திருநெல்வேலியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா: ரூ.96.52 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:30:51 PM (IST)

நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா: நிறுவனர் கிளிட்டஸ் பாபு பங்கேற்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:13:21 PM (IST)

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி: ராபர்ட் புரூஸ் எம்.பி., பங்கேற்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:02:43 PM (IST)
