» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி: ராபர்ட் புரூஸ் எம்.பி., பங்கேற்பு!

திங்கள் 14, ஏப்ரல் 2025 7:02:43 PM (IST)



பாளையங்கோட்டையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ராபர்ட்புரூஸ் எம்.பி., உட்பட திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். 

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேவின் சிலுவைப்பாடுகளையும், உயிர்த்தெழுலையும் தியானிக்கும் வகையில் ஆண்டுதோறும் 40 நாட் கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். இது லெந்து காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு லெந்துகாலம் கடந்த மார்ச் 5ம் தேதி சாம்பல் புதன் அன்று துவங்கியது.

இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. பாளையங்கோட்டையில் நேற்று புனித வாரத்தின் துவக்கமாக குருத்தோலை ஞாயிறு ஆசரிக்கப்பட்டது.

பாளை சவேரியார் பேராலயத்திலிருந்து தொடங்கிய குருத்தோலை ஞாயிறு பவனிக்கு சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்‌. திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புருஸ் எம்பி, முன்னிலை வகித்தார். 

இதில் சிஎஸ்ஐ பேராயரின் துணைவியார் ஜாய் பர்னபாஸ் உதவி குரு வேதபிரபா பொன்ராஜ், மிலிட்டரிலைன் சேகர தலைவர் மருதம், பாளை மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், மறைமாவட்ட செயலகமுதல்வர் ஞானப்பிரகாசம். ஆயரின் செயலாளர் மிக்கேல்ராஜ், சவேரியார் ஆலய பங்குத் தந்தை சந்தியாகு, உதவி பங்குத்தந்தைகள் ஜான்சன் சந்தியாகு மற்றும் இருபால் துறவற சபைகனைச் சேர்ந்த குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதர, சகோதரிகள் சவேரியார் பேராலய அனைத்து அன்பிய மண்ட லங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சேவியர் அமல்ராஜ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குருத்தோலை பவனி சவேரியார் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மிலிட்டரிலைன் கிறிஸ்துவ ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஓசன்னா பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் குருவானவர் ஜெனிபாராணி வேதப்பாடம் வாசித்தார். பேராயர் பர்னபாஸ் சிறப்பு செய்தியளித்து இறைஆசி வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory