» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிக்கிறது: டி.டி.வி. தினகரன்
சனி 12, ஏப்ரல் 2025 4:14:36 PM (IST)
தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிக்கிறது என டி.டி.வி. தினகரன் கூறினார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிக்கிறது என அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது "தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பெரிய கடல் போன்றது . தாங்கள் மோடி அணியில் இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்ந்து நீடிக்கிறது.
ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பு இல்லை. அதில் அங்கு சிலருக்கு பரந்த மனது இல்லை. தி.மு.க ஆட்சி தொடரக்கூடாது என்று நினைக்கக் கூடிய ஒத்த கருத்துள்ள கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும். தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறோம். தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறுகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:48:03 PM (IST)

கோடை விடுமுறை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:31:06 PM (IST)

திமுக அரசு பிரிவினைவாதத்துடன் செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:04:16 PM (IST)

மாநில உரிமைகளை மீட்க உயர் நிலைக் குழு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:53:32 PM (IST)

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் சென்றடைகின்றன : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பெருமிதம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:54:27 PM (IST)

நெல்லையில் தனியார் பள்ளியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு: காவல் ஆணையர் விசாரனை
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:29:16 PM (IST)
